கருணாநிதி நினைவிடம் நோக்கி நடத்திய பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டதால், அழகிரி அதிருப்தியில் ஆழ்ந்துள்ளார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, ஸ்டாலினை அழகிரி பகிரங்கமாக எதிர்த்து வருகிறார். இந்தநிலையில், தனது பலத்தை காட்டும் விதமாக கருணாநிதி நினைவிடம் 5ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று அவர் அறிவித்து இருந்தார். அதன்படி, அமைதி பேரணி இன்று நடைபெற்றது.
ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அழகிரி தெரிவித்த நிலையில், 10 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக சென்ற பேரணி கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்தில் அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அழகிரி எதிர்பார்த்த அளவு கூட்டம் திரளாததால், திமுக மூத்த நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.