அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்பு!

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தனர்.

இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நடைபெற்றது.

ஓட்டெடுப்பில் 51 ஓட்டுகள் ஆதரவாகவும், 49 ஓட்டுகள் எதிராகவும் பிரெட் கவனாக்குக்கு கிடைத்தது. இதனால் டிரம்பின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை உறுதியளித்து. இதனையடுத்து 53 வயது நிறைந்த பிரெட் கவனாக் நேற்றிரவு அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று கொண்டார்.

Exit mobile version