அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு – கிராண்ட் எலியாட் அறிவிப்பு

நியூசிலாந்து அணியில் 10 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்தவர் கிராண்ட் எலியாட் (Grant Elliott). தென்னாப்பிரிக்காவில் பிறந்த கிராண்ட், 2001ஆம் ஆண்டு நியூசிலாந்தில் குடியேறி அந்நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர், நியூசிலாந்து அணிக்காக இதுவரை 87 ஒரு நாள் போட்டிகளிலும், 17, இருபது ஓவர் போட்டிகளிலும், 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடி உள்ளார். ஓய்வு குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கிராண்ட், கிரிக்கெட்டில் ஓவ்வொரு நொடியும் தான் அனுபவித்து விளையாடியதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version