இந்தோனேசியாவை தொடர்ந்து ,அந்தமானில் ஏற்பட்ட திடீர் நில நடுக்கத்தால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்
அந்தமான் தீவில் நேற்று மாலை 6.54 மணி அளவில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. வீட்டில் உள்ள பொருட்கள் கிழே விழுந்து சிதறின. இந்த திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் வேறு எந்தெந்த பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என்பது குறித்த முழு விவரம் இன்னும் வெளியாக வில்லை.
இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் உருவாகி பலு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.அங்கு ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அந்த மானில் ஏற்பட்டுள்ள நில நடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.