விஜய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய சர்கார் பாடல்!

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் பாடல் அவரது ரசிகர்களாலேயே வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிமிட்டாங்காரன் என்ற பாடல் சமீபத்தில் யூ டியூபில் வெளியானது. இந்த பாடலின் வரிகள் ஒன்றுகூட புரியவில்லை என்றும், பாடலில் குறிப்பிடப்படும் வரிகள் பேச்சு வழக்கில் எங்குமே இல்லை என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சமீபகாலமாக வடசென்னை பேச்சுவழக்கில் பாடல்கள் எழுதப்படுவதும், அவை பிரபலம் அடைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அப்படியிருந்தும், சிமிட்டாங்காரன் பாடலின் வரிகள் விஜய் ரசிகர்களை கூட ஈர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். பாம்பே பாக்யா, விபின் அனேஜா, அபர்ணா நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர்.

Exit mobile version