ரபேல் போர் விமான ஊழல் பூதாகரமாக வெடிக்கும் – ராகுல்

ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த விவகாரத்தில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரபேல் ஒப்பந்தம் நடைபெற்றபோது, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தேவின் காதலியை வைத்து ரிலையன்ஸ் படம் தயாரித்தது என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இந்தநிலையில், ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரபேல் விவகாரம் இன்னும் சில வாரங்களில் பூதாகரமாக வெடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version