முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 58.
கடந்த 2006-11 ஆம் ஆண்டில் செய்தி மற்றும் விளரம்பரத் துறை அமைச்சராக பரிதி இளம்வழுதி பதவி வகித்துள்ளார்.
1996-2001-ல் சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ள பரிதி இளம்வழுதி, 1989-2011-ஆம் ஆண்டு வரை எழும்பூர் தொகுதியில் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இதனிடையே இன்று காலை உடல்நலக் குறைவால் பரிதி இளம்வழுதி உயிரிழந்தார். சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. பரிதி இளம்வழுதியின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post