மால்டா அதிபருடன் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சந்திப்பு

அரசு முறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மால்டா அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒரு வாரம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதல் நாடாக செர்பியா சென்ற அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், செர்பியா மற்றும் இந்திய உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மால்டா நாட்டிற்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்றடைந்தார். அங்கு, அவருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபர் மரியே லூயிசே கொலீரோ ப்ரெகாவை, வெங்கையா நாயுடு சந்தித்தார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் மற்றும் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version