தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதேபோல மற்ற மொழிகளையும் கொச்சைப்படுத்த வேண்டாம் : வெங்கையா நாயுடு

தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அதேபோல மற்ற மொழிகளையும் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

சென்னை தி.நகரில் உள்ள கேசரி மேல்நிலை பள்ளியின் 75வது ஆண்டு விழா மற்றும் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டும் விழா நடைப்பெற்றது. இதில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்களுக்காக 75 ஆண்டுகளாக இப்பள்ளி செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அதேபோல மற்ற மொழிகளையும் கொச்சைபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுகொண்ட அவர், தெலுங்கு மொழியை விருப்ப பாடமாக்கி பள்ளிகளில் கற்க வழி வகை செய்ய தமிழக முதல்வரை வலியுறுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

Exit mobile version