மாணவ-மாணவியர் புதிய தொழில் நுட்பம், விவசாய வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவர்

மாணவ-மாணவியர் புதிய தொழில் நுட்பத்திற்காகவும், விவசாய வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையாநாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 41 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்த கொண்டு, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மேற்படிப்புக்களை பூர்த்தி செய்த ஆயிரத்து 385 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நகர மயமாக்கல், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவசாயத்தை பாதிப்பதாக வேதனை தெரிவித்தார்.

வறட்சியை எதிர்க்கொள்ளும் விதை, நீர் சேமிப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகியவை அவசியம் என்ற அவர், திய தொழில் நுட்பத்திற்காகவும், விவசாய வளர்ச்சிக்காகவும் தங்களை அர்பணிக்க வேண்டும் என மாணவ-மாணவிகளை கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் வத்த குழம்பு, மோர் குழம்பு உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமே நமக்கானது என்றும், பிட்சா, பர்கர் போன்ற உணவுகள் நம் காலநிலைக்கு உகந்ததல்ல என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version