பால் பாக்கெட்டுக்கு பிளாஸ்டிக் தடை பொருந்துமா?

சத்தியமங்கலத்தில், பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக பூத் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் எம்.எல்.ஏ ஈஸ்வரன் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கருப்பணன்,
தமிழகத்தில் ஜனவரி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தடை என்பது பால் மற்றும் எண்ணெய் பாக்கெட், பிளாஸ்டிக் மக், பக்கெட் ஆகியவற்றுக்கு பொருந்தாது என்றார்.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பை, தட்டு, டம்ளர் போன்ற பிளாஸ்டிக் வகைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படும். எந்தெந்த வகை பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பது என்பது குறித்து ஐ ஏ எஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து ஆராயப்படும்.

அதன் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.

Exit mobile version