பாஜகவின் தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் பாராட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

பாஜகவின் தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய இணை அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை பகுதியில் பிரசாரத்தை துவங்கிய பொன். ராதாகிருஷ்ணன் பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகள், காய்கறி சந்தை, மீன் சந்தை ஆகிய இடங்களில் சென்று வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், நதிநீர் இணைப்புக்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருப்பது மனநிறைவாக இருந்தது என்றார்.

Exit mobile version