பயப்படுறியா குமாரு?… பாஜக வை விடாமல் துரத்தும் ராகுல் காந்தி

ரபேல் ஊழல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அஞ்சுவது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதிக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில ரஃபேல் விவகாரம் குறித்து பாஜக வை கடுமையாக தாக்கி பேசினார்.

பிரதமர் மோடி, தன்னை காவலாளி என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால், ஒரு காவலாளியே ஏழை மக்களிடம் கொள்ளையடித்தது துரதிருஷ்டவசமானது என்று அவர் விமர்சித்துள்ளார்.

காவலாளி ஏன் அப்படி செய்தார் என்று அறிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் , அருண் ஜேட்லி, ‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில், மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறுகிறார். அப்படியானால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பயப்படுவது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுலின் குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் முறியடிபோம் என தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமான விவகாரத்தில், காங்கிரஸ் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளிப்பதாக கூறிய அவர், காங்கிரசின் அடிப்படையற்ற, பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்றார்.

மத்திய அரசு களங்கமில்லாத அரசாக இருப்பதால் காங்கிரஸ் கட்சி விரக்தி அடைந்து இப்படி பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

Exit mobile version