பகலில் பானி பூரி விற்பனை, இரவில் வங்கிக் கொள்ளை – முறியடித்த சென்னை போலீஸ்!

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நேபாள கொள்ளையர்கள் 2 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கியில், கடந்த 1 ஆம் தேதி நள்ளிரவில் கொள்ளையடிக்க முயன்றது தொடர்பான வீடியோ காட்சி வெளியானது.

அப்போது, மும்பையில் உள்ள வங்கி தலைமையகத்தில் இருந்து சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளை முயற்சியைப் பார்த்த வங்கி ஊழியர்கள், போலீசாருக்கு சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததையடுத்து, தமிழக போலீசார் துரிதமாக செயல்பட்டு, கொள்ளை முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.

அதன்படி, வங்கியில் பதிவான சிசிடிவி காட்சியில் 2 பேர் மட்டுமே முகமூடி அணிந்து உள்ளே நுழைந்ததும், 4 கொள்ளையர்கள் கால் டாக்சியில் வந்து வெளியில் பாதுகாப்பிற்காக நின்றுகொண்டிருப்பதும் போன்ற காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர்.

இதனையடுத்து 6 பேர் தொடர்பான அடையாளங்களையும் சேகரித்த போலீசார், அருகில் உள்ள பகுதியில் பணிபுரியும் வட மாநிலத்தவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது, 6 பேரில் ஒருவர் வளசரவாக்கத்தில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்கள் 6 பேரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, கொள்ளையர்கள் பெங்களூரில் பதுங்கியிருப்பது தெரிய வந்த நிலையில், தனிப்படை போலீசார் விரைந்து சென்று கணேஷ் பொகட்டி, நரத் பொகட்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் மற்ற 4 கொள்ளையர்களும் தனித்தனியாக பிரிந்து சென்று தப்பியதும் தெரியவந்தது. அத்துடன், கொள்ளையர்கள் 6 பேரும், அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், சிலர் பாணி பூரி கடையும், சிலர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாகவும் வேலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version