நெல்லை கூடங்குளத்தில் 2 அணு உலையில் மின்உற்பத்தி தொடக்கம்

நெல்லை கூடங்குளம் அணு உலையில் உள்ள 2 வது அலகின் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.  கூடங்குளம் அணு உலையில் உள்ள இரண்டாவது அலகில் 560 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது . தற்போது பழுது சரிசெய்யப்பட்டதால் இன்று காலை முதல் இரண்டாவது அலகில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version