நெற்பயிர் விவசாயத்தை விட, வாழை விவசாயத்தில் ஐந்து மடங்கு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியில் ஒரு ஏக்கர் நிலபரப்பில் வாழை விவசாயம் வருகின்றார் பாண்டி என்ற விவசாயி. வாழை கன்றுகள் பயிரிட்டதில் இருந்து, ஒரு வருடம் கழித்து நல்ல பலனளிக்கும் என தெரிவிக்கும் இவர், நெல் விவசாயத்தை விட வாழை விவசாயத்தில் ஐந்து மடங்கு லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
வாழை பயிரிட ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவாவதாக தெரிவிக்கும் பாண்டி, அரசு மானிய விலையில் தரும் உரங்களை வாங்கி பயன்படுத்துவதால் பயிர்கள் நல்ல பலனை அளிப்பதாக கூறினார்.