நிலாவில் தண்ணீர் – நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை

நிலவில் தண்ணீர் உள்ளதை உறுதி செய்யும் விதமாக நாசா விஞ்ஞானிகளின் கட்டுரை ஒன்று பி.என்.ஏ.எஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது. நிலவின் துருவ மண்டலத்தில் இருள் சூழ்ந்த பகுதி மற்றும் குளிர் அதிகமான பிரதேசங்களில் ஐஸ்கட்டி வடிவத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்- 1 விண்கலம் மூலம் கண்டறியப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனடிப்படையில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழல் உள்ளதா என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version