மின்சார விமானம் இந்த ஆண்டு அறிமுகமாகிறது!

இத்தாலியின் டெக்னம்பி2006டி விமானத்தை மாற்றியமைத்து பரிசோதனை முயற்சியாக இந்த சிறிய ரக மின்சார வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தினை இந்த ஆண்டே அமெரிக்க நாட்டின் நாசா அமைப்பு பறக்கவிட உள்ளது. மேலும் இந்த விமானம் லித்தியம் பேட்டரியால் இயங்கக்கூடியது. இந்த விமானத்திற்கு எக்ஸ்-57 என்றப் பெயர் இடப்பட்டுள்ளது. நான்கு இருக்கைகள் மட்டும்தான் இந்த விமானம் கொண்டுள்ளது. இறக்கையில் 14 புரொபல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே இதன் இறக்கைகள் மிகவும் நீளமாக உள்ளன.

இதன் இறக்கைகளைத் தேவைப்படும் போது மடக்கி வைத்துக்கொள்ளலாம். இந்த விமானத்திற்கு தனியாக எந்த ஒரு எரிவாயுவும் தேவைப்படாது. இந்த விமானத்தில் 160 கி,மீட்டர் தூரம்வரை செல்லலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் லித்தியம் பேட்டரிகள் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் இந்தப் பேட்டரிகளை சார்ஜ் செய்யவும் முடியும்.

Exit mobile version