நிலவில் கால்பதித்த 2வது நபருக்கு 93வது வயதில் 4வது திருமணம்!

மனிதனின் சாதனையில் மிக முக்கிய சாதனையாக காலந்தோறும் எதிர்கால சந்ததியினருக்கு சொல்லப்பட்டு வருவது நிலவிற்கு சென்றதைப் பற்றிதான். குறிப்பாக நிலவில் முதன்முதலில் கால்வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றி அதிகம்பேர் பேசுவார்கள். நிலவில் கால் வைத்த இரண்டாம் நபர் பெரும்பாலான நபர்களுக்கு தெரியாது. அந்த நபர்தான் பஸ் ஆல்ட்ரின். அப்பல்லோ 11 என்ற விண்கலத்தினை நாசா நிலவினை ஆராய்ச்சி செய்யும் பொருட்டு 1969ல் விண்ணிற்கு அனுப்பியது. அப்போது அதில் பயணித்த மூவரில் ஆல்ட்ரினும் ஒருவர். இவர்தான் நிலவில் கால் வைத்த இரண்டாவது நபர் ஆவார். இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு திருமணப் புகைப்படத்தினை டிவிட்டரில் பதிந்திருந்தார். அவருக்கு இது நான்காவது திருமணம் ஆகும். தனது நீண்ட நாள் தோழியான ஆன்காவைத் திருமணம் செய்து கொண்டார். ஆன்காவிற்கு வயது 63 ஆகும். இதைகுறித்து டிவிட்டரில் இவர், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடிகளைப்போல உற்சாகமாக இருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

Exit mobile version