நயன்தாரா மகளாக நடித்த சுட்டிக்குழந்தை இவரின் மகளா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த சுட்டிக்குழந்தை மானஸ்வி அனைவரின் கவனத்தையும் பெற்றார். குறிப்பாக போலீஸ்காரருடன் குழந்தை மானஸ்வி பேசும் வசனங்களுக்கு திரையரங்குகளில் பலத்த கைத்தட்டல் கிடைத்தன.  இந்த சுட்டிக்குழந்தை யார் என்பது தெரியுமா?..
 அவர் வேறு யாருமல்ல,  பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் தான்.  நடிகர் கொட்டாச்சி, காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், அரவிந்த்சாமி நடித்து வரும் சதுரங்க வேட்டை 2 படத்திலும்  நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version