திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவே வெல்லும்!

திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெகுவிரைவில் நடைபெற உள்ளது. அந்த தொகுதிகள் பற்றிய புள்ளிவிவரங்களை இப்போது பார்க்கலாம்..

மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அதிமுகவின் ஏ.கே.போஸ். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி காலமானார்.

இதையடுத்து இத்தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட பட்டியலின்படி அங்கு ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து, 39 ஆயிரத்து, 64 பேர் ஆவர்.

இதேபோன்று பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 11 பேர் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் ஆவர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 96 ஆகும்.

இதேபோன்று திருவாரூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதியும் காலியானது.

அங்கு ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 356 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 661 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 13. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 30 ஆகும்.

சமீபத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியான அதிமுகவே அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் திருப்பரங்குன்றம் தொகுதி ஏற்கனவே அதிமுகவின் தொகுதியாக இருப்பதால் அங்கு அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிபிரகாசமாக உள்ளது.

இதேபோன்று திருவாரூர் தொகுதி உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததால், அங்கு வெற்றி பெறுவதை திமுக கவுரவ பிரச்னையாக கருதும்.

ஆனாலும் பிரியாணி கடையில் தாக்குதல், பியூட்டி பார்லர் பெண் மீது தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்களால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அங்கும் அதிமுகவே வெல்லும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version