திருட்டு விசிடிக்கு எதிராகத் தமிழக அரசு – அமைச்சர் கடம்பூர் ராஜு

சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் அமைச்சர் துரைக்கண்ணு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் “நமக்கு நாம்” படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “நமக்கு நாம்” படம் சமுதாயத்துக்கு முக்கியத்துவமான படமாக அமையும் என்று குறிப்பிட்டார். மேலும், திருட்டு விசிடிகளை தடுப்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வந்தார் என்றும், அதனைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, திருட்டு விசிடிக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுத்து வருவதாகவும் கூறினார்.

அமைச்சர் துரைக்கண்ணு பேசியது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, பொது மேடையில் பேசும் போது, எந்த சமுதாயத்தினரையும் அமைச்சர் துரைக்கண்ணு குறிப்பிட்டு பேசவில்லை என்றும், மாறாகத் தனிப்பட்ட ஒருவரையே குறிப்பிட்டு பேசியதாகவும் கூறினார். குறிப்பாக, சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் அமைச்சர் துரைக்கண்ணு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

Exit mobile version