திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

செயின்ட் பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திராவிட இயல் நிறுவன தொடக்க விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியதாக கூறினார்.

நாட்டை முன்னேற்றும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமின்றி, மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஒற்றுமையான இந்தியா உருவாக வேண்டும் என்றால், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தம்பிதுரை வலியுறுத்தினார்.

தமிழகத்தில் வெற்றிடம் என்பது கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த தம்பிதுரை. திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்று உறுதிபடக் கூறினார்.

 

Exit mobile version