தந்தை பெரியாரின் 140வது பிறந்த நாளை ஒட்டி அவரது திருவருவப் படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று, பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா. வளர்மதி, ஜெயவர்தன் எம்.பி. மற்றும் அதிமுக நிர்வாகிகளும் தந்தை பெரியாரின் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Discussion about this post