டிரம்ப்க்கு வந்த நச்சுக் கடிதம்! பிரித்து பார்த்தவரின் கதி என்ன தெரியுமா?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ரசாயன நச்சு தடவிய 2 கடிதங்கள் அனுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். இந்தக் கடிதம், அங்குள்ள பெண்டகனில் பரிசோதனை செய்யப்பட்டது.

அதிபர் டிரம்ப், பாதுகாப்புத் துறை செயலர் ஜிம் மேட்டீஸ் மற்றும் நிர்வாகி ஜான் ரிச்சர்சன் ஆகியோரது பெயருக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை பரிசோதித்த நிபுணர்கள் இருவர், மருத்துவமனையில் உயர் சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ரசாயன நச்சு தடவிய கடிதம் குறித்து, அமெரிக்க பாதுகாப்புத் துறை சட்ட வல்லுநர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கடிதங்களை யார் அனுப்பியது என்ற விபரங்கள் தெரியாத நிலையில், இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது குறித்தும், எந்தத் தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Exit mobile version