ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு – விவசாயிகள் கொண்டாட்டம்

தென்காசியில் 41 கோடி 50 லட்சம் செலவில் ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டதை  விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நபார்டு வங்கி மூலம் சுமார் 41 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை வரவேற்று பாவூர்சத்திரம் பேருந்து நிலையம், திப்பணம்பட்டி, அரியபுரம், ஆவுடையானூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Exit mobile version