சோழர் கால சிலை – அமெரிக்காவில் இருந்து மீட்பு! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சிலைகளை மீட்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அருங்காட்சிகயங்களில் இருந்து 2 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அலபாமா பர்மிங்காம் அருங்காட்சியகத்தில் இருந்து, சோழர் கால 12 ஆம் நூற்றாண்டு சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டதாகும். இதன் மதிப்பு  2 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலராகும். இந்திய ரூபாயில் சுமார் 1 கோடியே 60 லட்சம் ஆகும். மற்றொரு சிலை பீகார் மாநிலம் புத்தகயாவில் இருந்து கட்டத்தப்பட்டது. இதன் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். இதன் இந்திய ரூபாய் மதிப்பு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஆகும். இந்த 2 சிலைகளும் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டவை என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், அவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நிர்வாகம் முடிவு  செய்துள்ளது. 

Exit mobile version