கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சிலைகளின் தொன்மையை, நிபுணர்கள் குழு ஆராய்ந்து வருகிறது!

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கும்பகோணம் அருகே வைக்கப்பட்டுள்ள சிலைகளின் தொன்மையை, நிபுணர்கள் குழு ஆராய்ந்து வருகிறது.

மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள், கும்பகோணம் அடுத்துள்ள பந்தநல்லூர் பசுபதிஸ்வரர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள சிலைகளில், 382 சிலைகளின் பழமையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்டமாக 191 சிலைகளின் தொன்மைத் தன்மை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த பணி நடந்து வருகிறது.

தொல்லியல் துறையின் தெற்கு மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 15 பேர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version