சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் டிஜிட்டல் முறையில் அபராதம்

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், மோட்டார் வாகனச் சட்ட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் போலீசார்
டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அபராதத்தை வசூலிக்கும் புதிய முறை கடந்த மே மாதம் 10-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் 94% பேர் டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்த தொடங்கியுள்ளதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அபராதம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஜூலை 15-ம் தேதி வரை, 3 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது

Exit mobile version