சிவகார்த்திகேயன் படத்தில் ராதிகா சரத்குமார்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிருக்கும் சீமராஜா, செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷும் நடிக்கின்றனர். இந்த நிலையில், நடிகை ராதிகா சரத்குமாரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் படக்குழுவில் இணைந்ததில் மகிழ்ச்சி என்று ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா, சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version