சிபிராஜின் அடுத்தபடம் ‘வட்டம்’!

 

 

Breath –  (10 Second)

 

சிபிராஜ் நடிப்பில் கடைசிய வெளியான படம் சத்யா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கடந்த ஆண்டு, திரில்லர் படமாக “சத்யா“ படம் வெளியானது. சிபிராஜ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிபிராஜ், ‘ரங்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார். வினோத் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நிகிலா விமல் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படத்தில், முக்கிய வேடத்தில் சதீஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், 6 வருடங்களுக்குப் பிறகு ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன்  இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிபிராஜ் ஒற்றுக்கொண்டுள்ளார். காதல் மற்றும் ஆக்‌ஷன் படமாக இந்த படம் உருவாக உள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘வட்டம்’ என பெயர் தலைப்பு வைத்துள்ளனர்.

Exit mobile version