சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா? – நாளை தீர்ப்பு

சபரி மலையில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கேரள அரசு, திருவாங்கூர் தேவசம் போர்டு, மத்திய அரசு மற்றும் மத அமைப்புகள் தனித் தனியாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. சபரிமலை விவகாரத்தில் வெளியாக இருக்கும் தீர்ப்பு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version