கேரள மக்கள் ஒருமாத ஊதியத்தை அளிக்குமாறு பினராயி வேண்டுகோள்

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், அந்த மாநிலம் கடுமையான சேதத்தை சந்தித்தது. தற்போது அங்கு நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. வெள்ள நிவாரணமாக மத்திய அரசு முதற்கட்டமாக 600 கோடி ரூபாயை அறிவித்தது. மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல தரப்பினர் நிவாரண உதவிகளை வழங்கினர். இந்தநிலையில், முகாம்களில் இருந்த சுமார் ஐந்தரை லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளநிலையில், இன்னும் நான்கரை லட்சம் பேர் அங்கு தங்கி உள்ளனர். இந்தநிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், மழையால் ஏற்பட்ட பேரழிவை குறிப்பிட்டு சொல்ல முடியாது என தெரிவித்தார். ஏராளமான வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனை சீரமைக்க அதிகளவில் நிதி தேவைப்படுவதாக பினராயி விஜயன் கூறினார். இந்த நிலையில், மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்க பொதுமக்கள் ஒருமாத ஊதியத்தை அளிக்குமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version