புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமது தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகளை குறிப்பிட்டு பேசும்போது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மைக் இணைப்பை துண்டித்தது சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் செயல் என்றார்.
அவரது இந்த நடவடிக்கையை அதிமுக உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.