கருணாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த 16ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ், முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரியை அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். வேலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் ஜாமின் கோரி எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் கருணாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேவேளையில், கருணாசை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று, போலீசாரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருணாசிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், நீதிமன்றத்தில் கருணாஸ் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

Exit mobile version