உடற்பயிற்சி செய்து அசத்திய முதலமைச்சர்

சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி, இன்று எடப்பாடி அருகே உள்ள அனுப்பூரில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு முதலமைச்சர் உடற்பயிற்சி செய்தார். இதையடுத்து, பூங்காவில் இறகுப்பந்து மைதானத்தில் சிறிது நேரம் முதலமைச்சர் பழனிசாமி இறகுப்பந்து விளையாடினார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயம் எவ்வளவு கடினமான தொழில் என்பது தனக்கு தெரியும் என்றார். விவசாயிகள் நலனை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் கிராமங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version