உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு

உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக, பதவியேற்றவர், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி. அதன்பின்னர், சுஜாதா மனோகர், ரூமா பால், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர்,பெண் நீதிபதிகளாக பணியாற்றி உள்ளனர். தற்போது உச்ச நீதிமன்றத்தில், பெண் நீதிபதிகளாக, ஆர்.பானுமதி, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் உள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக அனைத்து பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு செயல்பட்டது. இந்தநிலையில், வரும் 5ஆம் தேதி முதல் மீண்டும் பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள், ஆர்.பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்குகளை விசாரிக்க உள்ளது.

Exit mobile version