இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார். தனுஷ் – கவுதம் மேனன் இருவரும் வேறு படங்களில் பிஸியானது, நிதி பிரச்னை என தொடர்ந்து இழுபறி நீடித்தால் படப்பிடிப்பு முடிவடையாமல் தள்ளி போனது. இந்நிலையில் தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இதுகுறித்து கவுதம் மேனன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. ஜூலை 20-ம் தேதி படத்தின் புதிய லோகோ வெளியாகும் என பதிவிட்டிருந்தார்.

Exit mobile version