இந்தியாவில் கலப்பட பால் தயாரித்து விற்கப்படுவதாக போலியான வீடியோ சமூக வலைதளலங்களில் பரவிவருகிறது.

இந்தியாவில் மோசமான கலப்பட பால் தயாரித்து விற்கப்படுவதாக பொய் செய்தியை பரப்பும் போலியான வீடியோ ஒன்று சமூக வலைதளலங்களில் தற்போது பரவிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி இந்தியாவில் 14 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஆனால் போலியாக பால் தயாரித்து 50 கோடி லிட்டருக்கு அதிகமான கலப்பட பால் விற்கப்படுவதாகவும் அந்த போலியான வீடியோவின் எழுத்துக்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதாரமின்றி கூறப்பட்டுள்ள பொய்யான தகவல் இது என்பதை பார்த்தவுடன் தெரிந்து கொள்ளலாம். பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்கும் பொது இப்படி ஒரு போலியான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை 18 லட்சம் மக்கள் பார்த்ததோடு 87000 பேர் பகிர்ந்தும் இருக்கிறார்கள். இப்படி இந்தியாவை இழிவு படுத்தும் போலியான வீடியோக்களை பரப்ப கூடாது மக்கள் விழிப்புணர்வோடு வீடியோக்களை பகிரவேண்டும், அதே போன்று பகிரும் வீடியோக்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கவேண்டுமே  தவிர, அவர்களை பீதியில் உறைய வைக்கும் மற்றும் பதட்டம் தரக்கூடிய தவறான தகவல்களை பரப்ப கூடாது.

Exit mobile version