ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் வெளியேறியது.. வங்காளதேசம் முன்னேறியது..!

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர்4 சுற்றின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. அதன்படி டாஸ் வென்ற வங்காளதேசம் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.

image

இதனால், 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்காளதேச அணி 239 ரன்கள் மட்டுமே சேர்ந்தது. அதன்படி, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக இமாம் உல் ஹக்கும் 83 ரன்கள் சேர்த்தார்.

இதனால், பாகிஸ்தான் அணி 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Exit mobile version