யூ-டியூப் [வலையொளி] தளத்திற்கு தலைமை வகிக்கும் இந்தியர்!

இந்தியர் ஒருவர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்குவது என்பது நம் நாட்டிற்கு மிகப்பெரிய பெருமை. குறிப்பாக தமிழத்தைப் பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதேபோல் தற்போது யூடியூபிற்கு தலைமை நிர்வாகியாக பொறுப்பில் அமர்ந்திருக்கிறார் நீல் மோகன் எனும் இந்தியர். முதலில் கூகுள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய நீல் மோகன் பிற்காலத்தில் யூடியூபில் வேலைக்கு சேர்ந்தார். நாம் காண்கிற யூடியூப் சார்ட்ஸ்-ஐ உருவாக்கியவர் இவர்தான்.

இவர் மட்டுமின்றி இந்தியாவைச் சேர்ந்த சிலர் பெரிய பெரிய சர்வதேச நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அவர்களை பின்வருமாறு காண்போம்.

மைக்ரோசாப்ட் – சத்யா நாதெல்லா

ஐபிஎம் – அரவிந்த் கிருஷ்ணா

அடோப் – சாந்தனு நாராயண்

விமியோ – அஞ்சலி சூட்

ஸ்டார்பக்ஸ் – நரசிம்மன்

ஃபெட் எக்ஸ் – சுப்ரமணியம்

விஎம்வேர் – ரகுராஜ்

பாலோ ஆல்டோ – நிகேஷ்

நெட்டப் – ஜார்ஜ் குரியன்

இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பலர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாகவும் குறிப்பாக தமிழர்களாகவும் உள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

 

Exit mobile version