ஈரோட்டில் யுடியூப் சேனலில் முதலீடு செய்து ஸ்மார்ட் போனில் சேனலைப் பார்த்தாலே இருமடங்கு சம்பாதிக்கலாம் என நூதன முறையில் மோசடி விளம்பரம் செய்த பொறியியல் பட்டதாரிகள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யுடியூப் சேனலலை, ஆண்ட்ராய்டு செல்போனில் பார்த்தாலே வருமானம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வந்தன. அதில், 1,440 முதல் 46,080 ரூபாய் வரையிலான பல திட்டங்களில் பணம் கட்டிச் சேர்ந்தால், மாதாமாதம் 272 ரூபாய் முதல் 8,704 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தது. இது குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இந்த விளம்பரத்தைச் செய்தது நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோர் என்பது தெரியவந்தது. பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் இருவரும் மக்களை யுடியூப் சேனலில் சேர வைக்க முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என மோசடியாக விளம்பரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மக்களை ஏமாற்றி மோசடி செய்ய முயன்றதாக காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Discussion about this post