திருவள்ளூர் அருகே இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பாதி புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் தனியார் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள ஏரியில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஏரிக்கரை ஓரத்தில் உள்ள முள் புதருக்குள் யாரோ இருப்பதை அறிந்து அங்கு சென்று பார்த்த போது, இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பாதி புதைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட நபர் மேல்நல்லாத்தூர் அமுதா நகரைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பது தெரியவந்தது. மகேஷ்குமாரின் கொலை குறித்து அவரது நண்பர்கள் 3 பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post