இருசக்கர வாகனம் மற்றும் காரை திருடி விற்பனை செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருசக்கர வாகனங்கள் திருடு போவது குறித்து, தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து, காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வந்தவர்களை பிடித்து விசாரித்த போது, சிலர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, விழுப்புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், பல பகுதியில் இரு சக்கரம் வாகனங்கள், கார் ஆகியவற்றை திருடி விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்தது. இவருக்கு உதவிய அருண்குமார் என்ற நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஆறு இரு சக்கர வாகனங்கள், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
—