கும்பகோணம் அருகே இளம் பெண் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், இவரது மனைவி வசந்தி. பாண்டியன் கோவையில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் வசந்தி வீட்டின் பின்புறம் வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post