கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் நியூஸ் ஜெ செய்தி எதிரொலியால் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த இளைஞர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற வராகபெருமாள் சன்னதியின் தெப்பக்குளம் குப்பைகளாலும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் சூழ்ந்திருந்தது. இதுதொடர்பாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் அண்மையில் செய்தி வெளியானது. இதனையடுத்து அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், நியூஸ் ஜெ செய்தி எதிரொலியால் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூய்மைப்படுத்தி குப்பைகளை அகற்றினர். இதனால் இளைஞர்களுக்கு பாரட்டு தெரிவித்த பொதுமக்கள், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.