திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் பழைய இரும்புக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம், மற்றும் தண்ணீர்த் தேவைகளை நிறைவு செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகிலுள்ள குட்டத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தாமஸ். எம்.ஏ.பி.எட் பட்டதாரியான இவர் ஜேசிபி
இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார்.
இதில் கிடைக்கும் உதிரிப் பாகங்களின் கழிவுகளைக் கொண்டு பல்வேறு இயந்திரங்களை உருவாக்கி வருகிறார். காற்றாலை, மரச்செக்கு ஆகியவற்றைத் தயாரித்தும், பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து எரிபொருள், கிரீஸ் ஆகியவற்றைத் தயாரித்தும் சந்தைப்படுத்தி வருகிறார்.
தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் காற்றை நேரடியாக உந்து சக்தியாக மாற்றுவதன் மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்வதோடு, அந்த காற்றைக் கொள்கலனில் சேகரித்து அதன் மூலம் நிலத்தடி நீரை மேலே கொணடு வந்து பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் செயல்படுத்தியுள்ளார். மேலும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தாமஸ் தெரிவிக்கிறார்.
Discussion about this post