இளம் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்வதை கட்டாயமாக்க வேண்டும் – வெங்கையா நாயுடு

இளம் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையின் தொடக்க விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 24 புள்ளி 11 மில்லியன் குழந்தைகள் ஒரு ஆண்டிற்கு, இந்தியாவில் பிறந்து வருவதாக கூறினார். டைரியா மூலம் குழந்தைகள் இறப்பை குறைக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு தனியார் மருத்துவமனைகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கிராமபுறங்களிலும் தனியார் மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என்றும், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சேவை செய்வதையே மருத்துவர்கள் குறிக்கோளாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், வெளிநாட்டிற்கு சென்று படித்தாலும், மீண்டும் தாய்நாட்டிலேயே வேலை பார்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version