ஒரு பாஜக எம்.எல்.ஏ. கூட வேறு கட்சிக்கு தாவப் போவதில்லை என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மே 23 ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவு வெளியானதும் கர்நாடகாவில் பல பாஜக எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சிக்கு தாவி விடுவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருக்கும் கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா, தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு பாஜக எம்.எல்.ஏ கூட வேறு கட்சிக்கு தாவப்போவதில்லை என்று கூறினார்.
ஆனால் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி மீது அதிருப்தியில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் தொடர மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
Discussion about this post