இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில்கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே,  ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.  இந்தத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் நடத்தவும்திட்டமிடப்பட்டு இருப்பதாக அவர் கூறி இருந்தார். இந்நிலையில், ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு கூறியிருப்பது, மாணவர்களிடையேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version